Posts

Image
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் நோக்கில் வருடா வருடம் குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தினர் இரத்ததான முகாம் நடாத்தி வருகின்றனர். இவ்வாண்டு இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த போதாமையை கருத்திற்கொண்டு நேற்றைய தினம் (28.06.2020) குருநகர் கலாச்சார மண்டபத்தில் மாபெரும் இரத்த தான முகாம்நடைபெற்றது. இந்த உயிர் காக்கும் நிகழ்வில் அருட்தந்தையர்கள்,சமுக சேவையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலதரப்பட்டோர் கலந்து இரத்த தானம் செய்தனர். 61 பேர் இரத்ததான முகாமில் இணைந்து கொண்டனர்
பாலினமும் சமூகஅந்தஸ்தும் பாலினம் என்பது இயற்கையானது. ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும். ஆனால் பால்நிலை என்பது அவ்வாறு இருக்க முடியாது. பால்நிலை சமத்துவமாகவே இருத்தல் வேண்டும். அதுவே சிறந்தவொரு விடயமாகும். பால்நிலை என்பது பாலினம் ஒன்றிற்குள்ள மதிப்பு சலுகை வாய்ப்பு என்பனவாகும். பாலினம் என்பது பிரதானமாக மூன்று வகைப்படும். அவையாவன ஆண் பாலினம் பெண் பாலினம் மாற்றுப் பாலினம் இந்த பாலினங்கள் எல்லாமே ஒரே விதமாக நடத்தப்படுகின்றனவா? பார்க்கப்படுகின்றனவா? என்பதே தற்போது நாம் எழுப்பும் கேள்வி ஆகும். இதற்கு பதில் இல்லை என்றே வரும். தெரிந்தோ தெரியாமலோ நாம் பால்நிலையில் சமத்துவத்தை உருவாக்கவில்லை. மிகச்சரியானது என்னவென்றால் உருவாக்க விரும்பவில்லை என்பதே ஆகும். ஒரு பாலினத்துக்கு வழங்கப்படும் சலுகை இன்னொரு பாலினத்துக்கு மறுக்கப்படுகிறது. அதுவே சமூகத்தின் சமநிலையை குழப்புகிறது. சமூகம் மட்டுமல்லாது அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என்பனவற்றிலும் இதன் தாக்கத்தை உணரமுடியும். ஆண் பாலினம் எங்களுடைய தமிழ் சமூகத்தை பொறுத்தவரை எப்போதுமே ஆண்களை முதன்மைப்படுத்திய ஒன்றாகவே காணப்படுகிறது. இதனா‌ல்
Image
குறும்பட விமர்சனம் "Life" இயக்கம்        -விக்னேஷ் வேணுகோபால் ஒளிப்பதிவு   - கலைச்செல்வன் படத்தொகுப்பு - சந்த்ரு இசை                 - ஸ்டான்லி இந்த குறும்படமானது விருது பெற்ற ஒன்றாகும். இக் குறும்படத்தில் உள்ள சிறப்பு என்னவெனில் படித்தவர்களில் இருந்து படிக்காதவர்கள் வரை மிக சுலபமாக விளங்கிகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உடல்மொழி மற்றும் பின்ணணி இசையூடாக இக்குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். இரண்டு நிமிடங்களில் மிக ஆழமான கருத்தை இயக்குனர் பார்ப்பவர்கள் மத்தியில் விதைத்துள்ளார். வாழ்க்கை என்பது இலகுவானது. அதை நாம் ஏன் கடினமாக்க வேண்டும் என்ற ஒரு கேள்வியையும் பார்ப்போர் மத்தியில் இயக்குனர் எழுப்புகிறார். இக் குறும்படத்தில் ஒரு சிறுவன் ஊடாக வாழ்க்கையின் தாற்பரியத்தை உணரவைத்துள்ளார். இக் குறும்படம் மிக குறுகிய நேரத்தை கொண்டுள்ளதால் சலிப்பு இல்லாது பார்க்க முடியும். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு குறும்படம் "Life" ஆகும். https://youtu.be/GFQhbp8efWw
உலக அகதிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, ஜூன் 20ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் தினம் ஜூன் 20 இல் அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி பிறநாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்லும் அகதிகள் தொடர்பிலான விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இவ்வருட கணக்கீட்டின்படி 68.5 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வௌியேறியுள்ளதுடன் அவர்களில் 25.4 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளதுடன் அவர்களில் அரைவாசிப் பங்கினர் 18க்கும் குறைந்த வயதுடையவர்கள் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உலகளாவிய ரீதியில் இரண்டு செக்கன்களுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் சுட்டிக்காட்டியுள்ளது. (பிரதி செய்யப்பட்டது)
https://m.facebook.com/story.php?story_fbid=135412624260285&id=100033746451473 Kokuvil Hindu College 2012 O /L & 2015 A/L RÉUNION
Image
Image