Posts

Showing posts from June, 2019
உலக அகதிகள் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, ஜூன் 20ஆம் திகதி சர்வதேச அகதிகள் தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் தினம் ஜூன் 20 இல் அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி பிறநாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்லும் அகதிகள் தொடர்பிலான விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இவ்வருட கணக்கீட்டின்படி 68.5 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வௌியேறியுள்ளதுடன் அவர்களில் 25.4 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளதுடன் அவர்களில் அரைவாசிப் பங்கினர் 18க்கும் குறைந்த வயதுடையவர்கள் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உலகளாவிய ரீதியில் இரண்டு செக்கன்களுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் சுட்டிக்காட்டியுள்ளது. (பிரதி செய்யப்பட்டது)