Posts

Showing posts from April, 2020
பாலினமும் சமூகஅந்தஸ்தும் பாலினம் என்பது இயற்கையானது. ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும். ஆனால் பால்நிலை என்பது அவ்வாறு இருக்க முடியாது. பால்நிலை சமத்துவமாகவே இருத்தல் வேண்டும். அதுவே சிறந்தவொரு விடயமாகும். பால்நிலை என்பது பாலினம் ஒன்றிற்குள்ள மதிப்பு சலுகை வாய்ப்பு என்பனவாகும். பாலினம் என்பது பிரதானமாக மூன்று வகைப்படும். அவையாவன ஆண் பாலினம் பெண் பாலினம் மாற்றுப் பாலினம் இந்த பாலினங்கள் எல்லாமே ஒரே விதமாக நடத்தப்படுகின்றனவா? பார்க்கப்படுகின்றனவா? என்பதே தற்போது நாம் எழுப்பும் கேள்வி ஆகும். இதற்கு பதில் இல்லை என்றே வரும். தெரிந்தோ தெரியாமலோ நாம் பால்நிலையில் சமத்துவத்தை உருவாக்கவில்லை. மிகச்சரியானது என்னவென்றால் உருவாக்க விரும்பவில்லை என்பதே ஆகும். ஒரு பாலினத்துக்கு வழங்கப்படும் சலுகை இன்னொரு பாலினத்துக்கு மறுக்கப்படுகிறது. அதுவே சமூகத்தின் சமநிலையை குழப்புகிறது. சமூகம் மட்டுமல்லாது அரசியல், பொருளாதாரம், வாழ்வியல் என்பனவற்றிலும் இதன் தாக்கத்தை உணரமுடியும். ஆண் பாலினம் எங்களுடைய தமிழ் சமூகத்தை பொறுத்தவரை எப்போதுமே ஆண்களை முதன்மைப்படுத்திய ஒன்றாகவே காணப்படுகிறது. இதனா‌ல்