
குறும்பட விமர்சனம் "Life" இயக்கம் -விக்னேஷ் வேணுகோபால் ஒளிப்பதிவு - கலைச்செல்வன் படத்தொகுப்பு - சந்த்ரு இசை - ஸ்டான்லி இந்த குறும்படமானது விருது பெற்ற ஒன்றாகும். இக் குறும்படத்தில் உள்ள சிறப்பு என்னவெனில் படித்தவர்களில் இருந்து படிக்காதவர்கள் வரை மிக சுலபமாக விளங்கிகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உடல்மொழி மற்றும் பின்ணணி இசையூடாக இக்குறும்படத்தை உருவாக்கியுள்ளனர். இரண்டு நிமிடங்களில் மிக ஆழமான கருத்தை இயக்குனர் பார்ப்பவர்கள் மத்தியில் விதைத்துள்ளார். வாழ்க்கை என்பது இலகுவானது. அதை நாம் ஏன் கடினமாக்க வேண்டும் என்ற ஒரு கேள்வியையும் பார்ப்போர் மத்தியில் இயக்குனர் எழுப்புகிறார். இக் குறும்படத்தில் ஒரு சிறுவன் ஊடாக வாழ்க்கையின் தாற்பரியத்தை உணரவைத்துள்ளார். இக் குறும்படம் மிக குறுகிய நேரத்தை கொண்டுள்ளதால் சலிப்பு இல்லாது பார்க்க முடியும். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு குறும்படம் "Life" ஆகும். https://youtu.be/GFQhbp8efWw