காலேல எட்டுமணி lecturers க்கு ஏழே முக்காலுக்கு எழும்பினா
பக்கத்த படுத்திருப்பாங்கள் பாஸ் அவுட் ஆனவங்கள் போல
எழும்புங்கடா எருமையள் எண்டு தலமாட்டில இருக்கிற தண்ணிய ஊத்தி தட்டி எழுப்பினா
தல இடிக்குது வரேல்ல நான் எண்டு ஒருத்தன் சொல்ல
பாலூன்ர பாடம் தானே பாத்து செய்துவிடுடா எண்டு மற்ரவன் சொல்லுவான்
வராட்டி போமாட்டன் எண்டு வில்லங்கப்படுத்தி எழுப்பிற்ரு குளிச்சிற்ரு வந்து பாக்க அயன் பண்ண சேட்ட அடுத்தவன் போட்டிருப்பான் அட நாயே எண்டு திட்டிற்ரு
எனி அயன்பண்ண late ஆகும் எண்டு
t சேட்ட போட்டுட்டு lecture போனா
அங்க படிப்பிக்கிற ஒரு அறுப்பும் விளங்காது
என்ன இழவிடா இது எண்டு அடுத்தவன கேட்டு நானும் மாட்டி அடுத்தவனயும் மாட்டிவிட
என்னடா அங்க கத
எழும்புங்கடா எண்டு வெளில திரத்தி விட
இது நமக்கு புதுசில்ல தானே
சிரிச்சு சிரிச்சு வெளியால வர
பசிக்குது மச்சி canteen போவம் எண்டுவான் ஒருத்தன்
சரி சாப்பாடு முக்கியம் எண்டு சாப்பிட போனா
ஒருத்தன் வடை எண்டுவான் மற்ரவன் றோள் எண்டுவான்
சரி ரெண்டயும் கலந்து வாங்கி canteen காறனயும் confuse பன்னி
ஒண்டு ரெண்ட கூட வாங்கிக்கொண்டு சாப்பிட போனா
உனக்கு எனக்கு எண்டு அடிபட்டு பறிபட்டு பிச்சு கொட்டி
சிதச்சு சின்னாபின்னம் ஆக்கி சாப்பிட்டுட்டு
அடுத்த பாடத்துக்கும் போகம அங்க இங்க எண்டு திரிஞ்சிற்ரு
முடிஞ்ச birthday க்கு கேக் வெட்டிற எண்டு காசு சேர்த்து
பாதி காசுக்கு கேக் வங்கிற்ரு மீதி காச பொக்கற்ருக்க போட்டுட்டு
கேக்க வெட்டி girls க்கும் குடுக்காம கொண்டு திரிஞ்சு கொட்டி துலச்சுப்போட்டு
போட்டோக்கும் போஸ் குடுத்திற்ரு
பார்டி எண்ட பேர சொல்லி அரிச்சு அரிச்சு அரியண்டம் குடுத்து அவன்ர பர்ச அபாசன் பண்ணிற்ரு
இரவு சாப்பாடு இண்டைக்கு தேவையில்ல எண்டு
அப்பிடியே படுத்திற்ரு அடுத்தநாள் எழும்பி
மறுபடியும் முதல்ல இருந்து....
இப்படியே நாட்கள் போக
Assessment எண்டு அப்பப்ப கழுத்தறுக்க கெஞ்சி கூத்தாடி type பண்ணி print எடுத்து கொடுத்து தொலைச்சிற்ரு கொஞ்சநாள் போக
மிட் எண்டு சொல்லி ஒரு கிழமை மின்னி மறைய
இப்பிடியே நாள் போய் செமிக்கு லீவு விட வீட்ட போய் படுத்திற்ரு
படிச்சவன் பாஸ் பண்ண படிக்காதவன் பாத்தெழுதி பாஸ் பண்ண
அரியர் விட்டவன்
என்ன அவசரம் அடுத்தவருசம் எழுதுவம் எண்டு exam பேப்பர எடுத்து வைப்பான்
வாய் கிடக்காம வாறவங்கள் போறவங்கள றாக்கிங் எண்ட பேரில வதச்சு வம்பிளுக்க
மார்சல்ட போப்போறன் எண்டுவான் அவன்
மார்சலும் மண்ணாங்கட்டியும் எண்டு வீரத்தில வீராப்பா கதைச்சுவிட
இதுகள் அடங்காதுள் எண்டு அடிச்சுவிடுவான் அவுட்டபொண்ஸ்
அங்க ஓடி இங்க ஓடி கடிதம் எழுதி கையெழுத்து வைச்சு கையப்பிடிச்சு கால்ல விழுந்து கம்பஸ்க்க வந்தா
பத்துப் பன்ரெண்டு பாடம் பாஸ் பண்ணாம இருக்கும்
அடிச்சு புடிச்சு அரியர் எல்லாம் முடிச்சு
Training எண்ட பேரில செத்து சுண்ணாம்பாகி
டிகிரி எடுத்திற்ரு போட்டோக்கு போஸ் குடுக்க பிடரில வெயில் சுடும்
என்னடா எண்டு கைய வைச்சா பின்பக்கத்தில பெரும்பகுதி free ஆ இருக்கும்.

(இதுதான் பல்கலை வாழ்க்கை)
Copy

Comments